Topic : Second coming

அப்படியே நீங்களும் மனுமகன் எந்நேரம் வருவாரென்று அறியாததி னாலே ஆயத்தமாயிருங்கள்.

Matthew 24:44

பரம அன்புக்கும் நற்கிரியைகளுக் கும் நமக்குத் தூண்டுதலுண்டாகும் படி ஒருவரை ஒருவர் கவனிப்போமாக.
சிலருக்குத் துர்வழக்கமாய் இருக் கிறதுபோல நாம் சபைக்கூட்டத்தை விட்டுவிடாமல் ஒருவரை ஒருவர் தேற்று வோமாக. அந்த மகாநாள் எவ்வளவுக்கு நெருங்கக் காண்பீர்களோ அவ்வளவுக்கு அதிகமாய் இவ்விதஞ் செய்யுங்கள்.

Hebrews 10:24-25

இவைகளுக்குச் சாட்சி சொல்லு கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய்; வருகிறேன் என்கிறார். ஆமென்; ஆண்டவராகிய சேசுவே, வாரும்.

Revelation 22:20

ஆதலால் விழித்திருங்கள். ஏனெ னில் உங்கள் ஆண்டவர் எந்நேரத்தில் வருவாரென்று நீங்கள் அறியீர்கள்.

Matthew 24:42

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் விவேகிகளாயிருந்து, ஜெபம்பண்ணுவதில் விழித்திருங்கள்.

1 Peter 4:7

ஆதலால் பிள்ளைகளே, அவர் வருங்காலத்தில் அவரால் நாம் வெட்கமடையாமல், அவருடைய வருகையில் நம்பிக்கையாயிருக்கும்படி அவ ரிடத்தில் நிலைத்திருங்கள். *** 28. அவரால் வெட்கம் அடையாமல் என்பதற்கு, அவர் உங்கள்மேல் குற்றம் சுமத்தி உங்களுக்கு அவல தீர்வையிட்டால், வெட்கமடைவீர்களே. அப்படியாகாமல் அவர் உங்களுக்கு நல்ல தீர்வையிடும்படி அவரிடத்தில் நிலைத்து நன்மையைச் செய்யுங்கள் என்பது கருத்து.

1 John 2:28

நானே அல்பாவும், ஓமேகாவும், ஆதியும் அந்தமும் என்று ஆண்டவராகிய கடவுள் சொல்லுகிறார். இவரே இருக்கிறவர், இருந்தவர், இனி வரப்போகிறவர், சர்வ வல்லபமுள்ளவர். (இசை. 41:4; 44:6; காட்சி. 21:6; 22:13.) *** 8. இந்த ஆகமம் அர்ச். அருளப்பரால் எழுதப்பட்ட கிரேக்க பாஷையில் அல்பா என்பது முதல் எழுத்தும், ஓமேகா என்பது கடைசி எழுத்துமாயிருக்கின்றது. ஆகையால் சர்வேசுரன் நாமே, அல்பா ஓமேகா என்று சொல்லும்போது எல்லாத்துக்கும் ஆதிகாரணமும் முடிவும் கதியும் நாமே என்று சொல்லுகிறாரென்று அறியவும்.

Revelation 1:8

இதோ, சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுக்குத் தன் தன் கிரியைகளுக் கேற்றபடி நான் அளிக்கும் பலன் என்னுடனே இருக்கிறது.

Revelation 22:12

ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டு உள்ளத்திலே பறிக்கிற ஓநாய்களாக உங்களிடத்தில் வருகிற கள்ளத் தீர்க்கதரிசிகள் மட்டில் எச்சரிக்கையாயிருங்கள்.

Matthew 7:15

மிகவும் பிரியமானவர்களே, நீங்கள் இந்த ஒரு காரியத்தை அறியாதிருக்கப்படாது; அதாவது: கர்த்தர் சமுகத்தில் ஒருநாள் ஆயிரம் வருஷம்போலும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலுமாம். (சங். 89:4.)

2 Peter 3:8

உங்களுக்குள் அந்த நற்கிரியையைத் துவக்கினவர் சேசுக்கிறீஸ்துவின் நாள்வரையில் அதை முற்றுமுடிய நடத்துவாரென்று நம்புகிறேன். *** 6. சேசுக்கிறீஸ்துவின் நாள் என்பது தீர்வைநாள்.

Philippians 1:6

அவர் பரலோகத்துக்கு எழுந்தருளிப்போகிறதை அவர்கள் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ வெண்ணுடையணிந்தவர்களாகிய இரண்டுபேர் அவர்கள் அருகே வந்து நின்று, *** 10. இரண்டுபேர் என்பது அர்ச். அருளப்பர் சுவிசேஷம் 20-ம் அதி. 12-ம் வசனத்தில் கண்டபடி மனித ரூபமாய்த் தோன்றிய இரண்டு சம்மனசுக்கள் என்றறிக.
அவர்களை நோக்கி: கலிலேய மனிதரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு நிற் கிறீர்கள்? உங்களிடத்தினின்று பரலோ கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த சேசுநாதர் எப்படிப் பரலோ கத்துக்கு எழுந்தருளிப் போகக் கண்டீர் களோ, அப்படியே திரும்பவும் வருவார் என்றார்கள்.

Acts 1:10-11


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |